பகிடிவதையின் கர்த்தாக்கள் ஜே.வி.பியினர்: நாமல்

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், குறித்த விடயத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்படுவதாகவும் அவரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா? என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு பல போலியான வாக்குறுதிகள் மற்றும் பொய்களைக் குறிப்பிட்டு ஆட்சியமைத்த அரசாங்கம் இன்று நெருக்கடியை எதிர்கொள்கிறது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் உளவியல் ரீதியான பாதிப்புக்களினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்து கொள்ளும் நிலை காணப்படுகிறது. அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதையால் பாதிக்கப்பட்டு தமது உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஜே.வி.பிக்கு பகிடிவதை தொடர்பில் புதிதாக எதையும் குறிப்பிடத் தேவையில்லை.

அவர்கள் பகிடிவதைகள் தொடர்பில் ஏனையவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். ஏனெனில், பல்கலைக்கழகங்களில் பகிடிவதையின் கர்த்தாக்கள் அவர்கள்தான்.

தமது அரசியல் தேவைக்காக பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை வன்முறையாக மாற்றியமைத்தார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜக்ஷ தெரிவித்துள்ளார்.

#இலங்கை
இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்
கொழும்பில் பேரூந்தில் மோதி உயிரிழந்தவர் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்..!
ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத ஆயுதங்கள் மீட்பு
இலங்கையின் முக்கிய பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ள ஆபத்து-விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!
தேசபந்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்-உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்பா..!
கொழும்பு மாநகர சபைக்கும் தேர்தல் தடை
கிளிநொச்சியில் குடும்பபெண்ணை சுத்து போட்டு தூக்கிய பொலிசார்..!
கருத்துரையிடுக

Recommended For You

About the Author: admin