பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு கடூழிய சிறை

பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அரச அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை இன்று(09) விதித்துள்ளது.

7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடம் குறித்த அதிகாரி பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன்போது, குற்றவாளியின் வாக்களிக்கும் உரிமை உட்பட அவரது சிவில் உரிமைகளை இரத்து செய்ய தேர்தல் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த சம்பவம் 2025 மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், அந்தப் பெண்ணை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற நிலையில், இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் குறித்து நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin