யாழில் இடம்பெற்ற பயங்கர விபத்து!

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சற்று முன்னர் இ.போ.ச சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார்க் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது, பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவித்தல்!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாளைய தினம் (23.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய... Read more »
Ad Widget

யாழ் கோப்பாய் நவமங்கையர் நிவாசத்தில் அறநெறி வகுப்புகள் ஆரம்பமாகின

யாழ்.கோப்பாய் – இருபாலை பகுதியில் உள்ள நவமங்கையர் நிவாசத்தில் அறநெறி வகுப்பு மற்றும் கலை மன்றம் ஆரம்ப நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். கோப்பாய் பிரதேச பாடசாலைகளில் கல்வி... Read more »

அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடாத்திய வைரவிழாவும் பட்டமளிப்பு விழாவும் யாழ். சாவகச்சேரி இன்று இடம்பெற்றது.

அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடாத்திய வைரவிழாவும் பட்டமளிப்பு விழாவும் யாழ். சாவகச்சேரி இன்று இடம்பெற்றது. அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் தலைவர் சைவப் புலவர் சி.கா கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா,... Read more »

ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு!

வெலிகம – பொல்வத்த பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் ஒருவர் படுகாயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் இன்று... Read more »

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மர்மப் பொருட்கள் பொலிசாரால் மீட்பு!

இலங்கைக்கு கடத்தவிருந்த தமிழகம் தனுஸ்கோடி கடற்கரையில் மறைத்து வைத்திருந்த பெருமளவு பாதணிகளை தமிழகப் பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று (22-01-2023) இரவு 7.30 மணியளவில் இராமேஸ்வரம் – தனுஸ்கோடி கடற்கரையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போதே இந்த பாதணிகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட பாத அணிகள் 3... Read more »

வெளிநாடு செல்லத் தயாராகும் எம்.பி.க்கள் குழு!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இருபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மற்றுமொரு எம்.பி.க்கள் குழு வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, மற்றும் சில எம்.பி.க்கள் அரசியலில் இருந்து... Read more »

கடுமையான வருத்தத்தில் இருக்கும் மைத்ரி!

மக்கள் பணம் வழங்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குல் வழக்குத் தீர்ப்பில் விதிக்கப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகையான 10 கோடி ரூபாவினை செலுத்த எவ்வித பொருளாதார இயலுமையும் தமக்கு கிடையாது... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கும் பொலிசார்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான போதிய பாதுகாப்பை தற்போது கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து வழங்க முடியாது என பொலிஸ் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் துறையின் மொத்த... Read more »

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கான மூல காரணத்தை வெளிக்கொணர இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில்... Read more »