இலங்கையில் 9 மாதங்களில் 827 மில்லியன் டொலர் நேரடி முதலீடு..!

இலங்கையில் 9 மாதங்களில் 827 மில்லியன் டொலர் நேரடி முதலீடு..! நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில் மொத்த நிதிச் செயற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி)... Read more »

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன நியமனம்..!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன நியமனம்..! உயர் நீதிமன்ற நீதியரசர் அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி... Read more »
Ad Widget

சிறைக்குள் நடைபெற்ற போதைப்பொருள் வியாபாரம் ; சிக்கிய பொலிஸ் அதிகாரி..!

சிறைக்குள் நடைபெற்ற போதைப்பொருள் வியாபாரம் ; சிக்கிய பொலிஸ் அதிகாரி..! அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை தடையின்றி சுதந்திரமாக விற்பனை செய்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.... Read more »

இலங்கையில் பாதுகாப்பில்லையாம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை

இலங்கைக்கு வருகைதரும் மற்றும் இலங்கையில் தங்கியுள்ள அவுஸ்திரேலியர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக அவுஸ்திரேலியர்கள் இலங்கையில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. அத்துடன்,... Read more »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் A/L மாணவர்களுக்கு படகுச் சேவை..!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் சிரமத்திற்குள்ளாகியுள்ள உயர்தரப் பரீட்சை மாணவர்களைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இவ்விரு மாவட்டங்களிலும் சில பிரதேசங்கள்... Read more »

கிங், நில்வளா கங்கைகளில் வெள்ள அபாயம்..!

கிங் மற்றும் நில்வளா நதிப் படுக்கைகளின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாகச் சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளில்... Read more »

முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் சடலம் மீட்பு..! பொலிஸார் விசாரணை

முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் சடலம் மீட்பு..! பொலிஸார் விசாரணை மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மஹரகம பொலிஸாருக்குக்... Read more »

பள்ளிச் சிறார்களிடையே புகைத்தல் அதிகரிப்பு

பள்ளிச் சிறார்களிடையே புகைத்தல் அதிகரிப்பு ​ ​பள்ளிச் சிறார்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சிறப்பு சுவாச நோய் மருத்துவர் பேராசிரியர் துமிந்த யாசரத்ன தெரிவித்துள்ளார். ​பெரும்பாலான மாணவர்கள் 14 அல்லது 15 வயதில் சிகரெட்டுகளை முயற்சி செய்யத் தொடங்குகிறார்கள் என்று... Read more »

வெளிநாட்டவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கு உரிமம் வழங்கல் இடைநிறுத்தம்

வெளிநாட்டவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கு உரிமம் வழங்கல் இடைநிறுத்தம் ​ ​மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) ஆனது, இலங்கையில் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு உரிமம் கோரும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு உரிமங்கள் வழங்குவதைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ​மேலும், வெளிநாட்டவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்காக தற்காலிக... Read more »

எதிர்க்கட்சிகளின் பேரணி – ஒலிபெருக்கிகளை அகற்ற காவல்துறை உத்தரவு !!

எதிர்க்கட்சிகளின் பேரணி – ஒலிபெருக்கிகளை அகற்ற காவல்துறை உத்தரவு !! கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சைகள் (GCE Advanced Level Examinations) தொடர்ந்து நடைபெற்று வருவதைக் காரணம் காட்டி, நுகேகொடையில் இன்று (நவம்பர் 21) நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சிகளின் பேரணிக்காக வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை காவல்துறை... Read more »