பள்ளி மாணவர்களுக்கு தினமும் உடற்பயிற்சி: கல்வி அமைச்சு முடிவு

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பாடசாலைகளிலும் தினமும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த முடிவு, கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்டதாக, கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலை விளையாட்டுச் சங்கங்களுக்கும் தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, பயிற்றுநர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பிள்ளைகளின் விளையாட்டு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் போன்ற விடயங்களை ஒருங்கிணைக்க, விளையாட்டு அமைச்சுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையே ஒரு கூட்டு குழுவை அமைக்கவும் இந்தக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் சேனவிரத்ன மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: admin