செம்மணி மனித புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம்..!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம்..!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில் , பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

 

இந்நிலையில் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

 

அதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன் கடந்த 14ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்றில் செம்மணி புதைகுழி வழக்கு விசாரணைகளின் போது, தற்போது அகழ்வு நடைபெறும் பகுதிகளை சூழவுள்ள பகுதிகளிலும் புதைகுழிகள் இருக்கலாம் என வலுவான சந்தேகம் உள்ளமையால் மேலும் 08 வார கால பகுதி தேவைப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் மன்றில் கோரிக்கை முன் வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மன்று கட்டளையிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin