ஒருவன் இன்னொருவன் பணத்தை எடுத்ததும் அவனை “பிக்பாக்கட் திருடன்” என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால் அரசியல்வாதி ஒருவன் மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடியுள்ளான்.
அவனை “மிஸ்டர் கிளீன்”( திருவாளர் பரிசுத்தம்) என்று கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கின்றனர்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கின்றனர். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கின்றனர்.
ஆனால் மக்கள் பணத்தை சுருட்டிய ரணில் சட்டத்திற்கும் மேலானவர் என்கின்றனர்.
அவரை திருடன் என்று கூறக்கூடாதாம். அவருக்கு கை விலங்கு போடக்கூடாதாம்.
அவரை சிறை மருத்துவனையில் தங்க வைக்க வேண்டும். அதுவும் வசதி இல்லை என்றால் அதைவிட வசதியாக பொது மருத்துவமனையில் வைக்க வேண்டுமாம்.
எல்லாவற்றையும்விட அவருக்கு சிறை உணவு வழங்கக்கூடாதாம். அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டுமாம்.
என்னடா நியாயம் இது?
அரசியல்வாதிகள் சிறிய தவறுக்காக தண்டிக்கப்படக்கூடாது என்கிறார் மகிந்த ராஜபக்சா.
அதாவது மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடுவது சிறிய குற்றமாம். அதற்காக தண்டிக்கப்படக்கூடாதாம்.
மகிந்தா பரவாயில்லை. எங்களுடைய “தமிழ் கிளீன்” சுமந்திரன் அவர்கள் ரணிலை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் நிறுத்தியது தவறாம்.
மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடிய ரணிலை சிறையில் அடைத்தது தவறு. அவருக்கு உடன் பிணை வழங்கியிருக்க வேண்டும் என்று வேற கூறியிருக்கிறார்.
அரசியல்வாதிகளை வெள்ளிக்கிழமை கைது செய்யக்கூடாது என்றோ அல்லது கைது செய்தாலும் அவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கக்கூடாது என்றோ அவர் எந்த சட்டப் புத்தகத்தில் படித்தார்?
தனது நோயாளி மனைவிக்கு உணவு வழங்கவேண்டியிருப்பதால் ரணிலுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் கெஞ்சினார்.
ஆனால் இதே ரணில் லண்டனில் தனது மனைவிக்கு சமைக்க ஒரு நாளைக்கு ஆயிரம் பவுண்ட் ( 4 லட்சம் ரூபா) சம்பளத்தில் ஒரு சமையல்காரரை நியமித்தாராம்.
அப்படிப்பட்ட யோக்கியரைக் காப்பாற்றத்தான் மகிந்த ராஜபக்சா முதல் சுமந்திரன் வரை பலரும் ஓடி வருகின்றனர்.
ரணில் கைது பல திருடர்களையும் அவர்களது கூட்டாளிகளையும் மக்களுக்கு நன்கு இனங்காட்டியுள்ளது.

