யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் வேரம் பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சம்பவம் அதாவது வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொள்ளையிட சென்ற கொள்ளையர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு மது அருந்திவிட்டு போதையில் தூங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.... Read more »
சிறுவர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் வடமாகாண சபை விசேட அவசர உதவி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 070 666 66 77 என்ற இந்த இலக்கம் நேற்று (25) முதல் செயற்படும் என வடமாகாண சபை அறிவித்துள்ளது. வழிகாட்டல்கள்... Read more »
இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை பெற்று அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பவ்ரல் அமைப்பு ஈடுபட்டுள்ளது. உரிய அதிகாரிகளிடம் தகவல் உரிமை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் குறிப்பிட்ட தகவல் கிடைத்ததும் அதனை பகிரங்கப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. விபரங்களை வெளியிடுமாறு... Read more »
பென்சின் என்ற ரசாயனம் வேதிப்பொருள் கலந்ததின் காரணமாக தனது தயாரிப்புகளான டவ் ட்ரை மற்றும் டவ் ஷாம்பை யுனிலீவர் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. இது குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “கடந்த 2021ம் ஆண்டு ஒக்டோபர்... Read more »
ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் சுமார் இருபதாயிரம் ரூபாவினை வரியாகச் செலுத்த வேண்டி வரும். இவை நேரடி வரிகள். ஆனால் எமது நாட்டில் இன்னமும் அதிகமாக இருப்பது மறைமுக வரிகளேயாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... Read more »
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரது பயணத் தடையை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட மனுவை... Read more »
இலங்கையில் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில் 2022 ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரையான பருவத்தில்... Read more »
கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மானிங் வர்த்தக சங்க தலைவர்... Read more »
இலங்கையில் 110 வயதை கடந்து வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவந்த அவர் இன்று (26) மரணமடைந்தார். அலிக்கம்பை கிராமத்தை சேர்ந்த முத்து முத்துசாமி என்பவரே இவ்வாறு 110 வயதில் மரணமடைந்துள்ளார். கிராமத்தின் மூத்த... Read more »
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்ட வழிகளில் பணம் அனுப்புவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, இரு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், நான்கு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்களுக்கும் உட்பட்டு இறக்குமதி செய்வதற்கான வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. Read more »

