கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.
மழை காரணமாக மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மானிங் வர்த்தக சங்க தலைவர் எச்.உபசேன தெரிவித்துள்ளார்.
விலை
ஆனால் வரி அதிகரிப்பால் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் காய்கறிகள், பழங்கள் விலையில் பெரிய அளவில் குறைவு ஏற்படாது எனவும், கொழும்பில் ஒரு கிலோ போஞ்சி மற்றும் கரட்டின் மொத்த விலை ரூ.300 ஆகவும் தம்புள்ளை மொத்த வர்த்தக நிலையத்தில் ரூ.275 ஆகவும், அங்கு சில்லறை விலை ரூ. 305 மற்றும் 360 ஆக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஒரு கிலோ கோவா மொத்த விலை ரூ.250 ஆகவும், தம்புள்ளையில் ரூ.138 ஆகவும், ஒரு கிலோ கோவா சில்லறை விலை ரூ.360 ஆக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தக்காளி மற்றும் கத்தரிக்காயின் மொத்த விலை கிலோ ஒன்று ரூ.155 முதல் 200 ஆகவும், சில்லறை விலை ரூ.205 முதல் 300 ஆக இருந்ததாகவும், கொழும்பில் ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் மொத்த விலை ரூ.180க்கும், தம்புள்ளையில் ரூ.125, சில்லறை விலை ரூ.135 முதல் 230 வரை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.