பென்சின் என்ற ரசாயனம் வேதிப்பொருள் கலந்ததின் காரணமாக தனது தயாரிப்புகளான டவ் ட்ரை மற்றும் டவ் ஷாம்பை யுனிலீவர் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.
இது குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
“கடந்த 2021ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன்பு தனது தயாரிப்புகளில் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துவிட்டதாகக் கூறி அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது
நெக்சஸ், சாவே, ட்ரெஸ்ஸமே, டிகி மற்றும் ஏரோஸார் ட்ரை ஷாம்பூ ஆகியனவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.
நீண்ட காலமாகவே அழகு சாதனப் பொருட்களின் ஆபத்துகளைப் பற்றியும், பென்சீன் நம் உடலில் கலந்தால் நமக்கு ரத்தப் புற்றுநோய் அல்லது ரத்தம் சம்பந்தப்பட்ட பிற புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.