இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் பகிரங்கப் படுத்தப்படும்

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை பெற்று அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பவ்ரல் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

உரிய அதிகாரிகளிடம் தகவல் உரிமை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் குறிப்பிட்ட தகவல் கிடைத்ததும் அதனை பகிரங்கப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

விபரங்களை வெளியிடுமாறு கோரி கடிதம்
பவ்ரல் அமைப்பு நேற்று இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை வெளியிடுமாறு கோரி சபாநாயகருக்கும் குடிவரவு குடியகல்வு துறை திணைக்களத்திற்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தியே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி சபாநாயகருக்கு எழுதியுள்ளதாக தெரிவித்துள்ள பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியராச்சி, குடிவரவு குடியகல்வு திணைக்கத்தின் தகவல் அறியும் உரிமை அதிகாரிகளை விபரங்களை வெளியிடுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor