முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி வழங்கிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை திருகோணமலை சம்பூர் சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்த போது அதனை சம்பூர் பொலிஸார் தடுக்க முற்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே,... Read more »
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரையிலான பயணிகள் படகு சேவை நாளை (13.05.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த நிலையில், நாகைக்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானதால் வரும் 17ஆந் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும்... Read more »
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பமானது. இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய கம்பர்மலை வன்னிச்சி அம்மன் கோவிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , முன்னாள் வடமாகாணசபை... Read more »
அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வெளியிட்ட அறிக்கையில் தேசிய சொத்துக்கள் மற்றும் அரச நிறுவனங்களை விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.... Read more »
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப்பர் சவுக்க சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான ஆவணங்கள் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச்... Read more »
ஈழத்தமிழர்களில் பாடும் திறன் கொண்ட அநேகர்களுக்கான அங்கீகாரம் தென்னிந்தியாவில் அதிகளவில் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் தென்னிந்தியாவில் இடம்பெறும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றாலும் தமிழ் சினிமாவில் அதிகமாக கிடைப்பதில்லை. தென்னிந்தியாவில் புகழ்பெற்ற Rap இசை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் வலம்... Read more »
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் இருவரும் அவர்களுக்கு உதவி புரிந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள் எமிரேட்ஸ் விமானச் சேவையின் ஊடாக கனடா செல்லவிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகரிகளால்... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார். கோட்டையில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.... Read more »
இலங்கையின் மேற்கு மூலையில், இந்தியாவுக்கு மிகவும் அண்மித்த – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த – இயல்பான இயற்கை சூழமைவுகளைத் தன்னகத்தே கொண்ட சுதேசிய குடிமக்கள் செறிந்து வாழும் மாவட்டம் மன்னார் ஆகும். இது, நீர் வளமும், நிலவளமும், கடல் வளமும், கனிம வளமும் கொண்ட... Read more »

