ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி வரும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி

ஈழத்தமிழர்களில் பாடும் திறன் கொண்ட அநேகர்களுக்கான அங்கீகாரம் தென்னிந்தியாவில் அதிகளவில் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் தென்னிந்தியாவில் இடம்பெறும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றாலும் தமிழ் சினிமாவில் அதிகமாக கிடைப்பதில்லை.

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற Rap இசை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் வலம் வரும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி தனது படங்களில் ஈழத்தமிழ் பாடகர்களினையும், இந்திய தமிழ் பாடகர்களினையும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் தனது இசைப்பயணத்தில் சென்று வருகின்றார்.

இதன் காரணமாக ஈழத்தமிழ் பாடகியான கரிஷ்மா ரவிச்சந்திரனை தொடர்ந்து தனது படங்களில் பாடல்களினை பாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கி வருகின்றார்.

‘தனி ஒருவன்’ படத்தில் ‘காதல் கிரிக்கெட்டு’ பாடலில் தனது குரலால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கரிஷ்மா ரவிச்சந்திரன்.

மிக அண்மையில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்திலும் ‘அச்சோ அச்சோ‘ என்ற பாடலை பாடும் வாய்ப்பை ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, கரிஷ்மா ரவிச்சந்திரனுக்கு வழங்கியுள்ளார்.

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற Rap இசை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் அனைவர் மனதிலும் இடம்பிடித்து வருகிறார் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி.

இவர் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அதிக மரியாதையும் அன்பும் கொண்டவர்.

அந்த அன்பையும் மரியாதையையும் தன்னுடைய அனைத்து படைப்புகளிலும் வெளிக்காட்டியும் வருகிறார்.

எட்டு அத்தியாயங்களுடன் தமிழ் ஆவணப்படமான ‘தமிழி‘ என்ற படத்தை உருவாக்கியதோடு ‘மாணவன்‘ என்ற ஆவணப்படத்தையும் உருவாக்கினார்.

‘ஈழத்தமிழ் கலைஞர்களுக்கு தான் தனது இசையில் வரும் படங்களில் பாடுவதற்கு சந்தர்ப்பங்களினை வழங்குவேன்‘ பல மேடைகளில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அவர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin