தமிழகம் – யாழ் படகு சேவை: மீண்டும் ஒத்திவைப்பு

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரையிலான பயணிகள் படகு சேவை நாளை (13.05.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த நிலையில், நாகைக்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானதால் வரும் 17ஆந் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும், குறித்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகைக்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானதால், வரும் 17ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆந் திகதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin