சட்டவிரோத கனடா ஆசை: யாழ், வவுனியா, மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய நபரும், வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான நபரும் துபாய் ஊடாக கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

எமிரேட்ஸ் EK-648 விமானத்தில் செல்வதற்கு இருவரும் போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியதால், அவர்களை கைது செய்ய கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கடவுச்சீட்டை தயாரித்த நபர் நீர்கொழும்பில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.

துரிதமானச் செயற்பட்ட குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் அந்த விடுதியை சோதனை செய்து, அந்த நபரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என ஆவார்.

கைது செய்யப்பட்ட போது, ​​அவரது பயணப் பையில் ஏழு போலி இலங்கை கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஐந்து கனேடிய வதிவிட விசாக்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 10 அச்சிடப்படாத போர்டிங் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin