காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ ஊடுருவல் தீவிரம்

காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ ஊடுருவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வடக்கு காசாவின் ஜபாலியா மற்றும் தெற்கு ரஃபாவில் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 82 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 550,000... Read more »

குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சிறுமி- கர்ப்பமாக்கிய இளைஞன் கைது

2024ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இலங்கைதீவில் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் இதுவரையிலும் 2751ஆக பதிவாகியுள்ளதாக அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பல சிறுமிகள் கர்ப்பிணியாக்கப்படுவதுடன், எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றனர். அந்த வகையில், காதல் என்ற போர்வையில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி தற்போது... Read more »
Ad Widget

குமுதினி படகு படுகொலை சம்பவம்- 39 ஆண்டுகள் நிறைவு!

குமுதினி படகில் பயணித்த 36 தமிழர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஜே.ஆர்.ஜயவர்த்தனா தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கம் அப்போது பதவியில் இருந்தது. 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவின் மாவலித்துறையிலிருந்து நயினாதீவின்... Read more »

“தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலாக மாறியிருக்கும்”

தமிழீழம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் தென்னிலங்கை தற்போதைய பாலஸ்தீனமாக மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாலஸ்தீன பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது. குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு... Read more »

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

அவசரமாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து உத்தியோபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. நாடாளுமன்றத்தை கலைப்பது... Read more »

பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நியாயம், தமிழர்களுக்கு ஒரு நியாயமா? சுமந்திரன் குற்றச்சாட்டு

உள்நாட்டு போரின் போது தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் இலங்கை அரசாங்கம் நயவசஞ்கத்துடன் செயறப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை தொடர்பில் அக்கறை காட்டும் இலங்கை அரசாங்கம், அந்த அக்கறையை... Read more »

தைவானை அச்சுறுத்தும் சீனா: எல்லை மீறிய போர் விமானங்கள்

சீனாவின் சுமார் 45 போர் விமானங்கள், தைவான் எல்லையை மீறி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தைவானின் புதிய ஜனாதிபதி பதவியேற்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சீனாவின் அத்துமீறலை தைவான் கண்டித்துள்ளது. இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சு... Read more »

முல்லைத்தீவு நகரை சுற்றி நோட்டமிட்ட உலங்கு வானூர்தி

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை மக்கள் நினைவு கூருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமானதாகும். இந்நிலையில் இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு... Read more »

வட மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்.

தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் (14/05/2024) இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழியல் ஆய்வு நடுவகம்... Read more »

“முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்”: வல்வெட்டித்துறையில் கஞ்சி வழங்கிவைப்பு

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, ஆலடிச்சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. தமழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி... Read more »