இந்திய மகளிர் அணியிடம் டி-20 தொடரை இழந்த இலங்கை..!

இந்திய மகளிர் அணியிடம் டி-20 தொடரை இழந்த இலங்கை..!

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் தொடரில் நேற்று இடம்பெற்ற 03 ஆவது போட்டியிலும் இலங்கை மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Imesha Dulani அதிகபட்சமாக 27 ஓட்டங்களையும், Hasini Perera 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய மகளிர் அணி சார்பில் Renuka Singh 04 விக்கெட்டுக்களையும், Deepti Sharma 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் 113 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இந்திய மகளிர் அணி 13.2 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 08 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Shafali Verma ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Kavisha Dilhari 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 05 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.

Recommended For You

About the Author: admin