2024ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இலங்கைதீவில் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் இதுவரையிலும் 2751ஆக பதிவாகியுள்ளதாக அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், பல சிறுமிகள் கர்ப்பிணியாக்கப்படுவதுடன், எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றனர்.
அந்த வகையில், காதல் என்ற போர்வையில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி தற்போது அவர் குழந்தை பெற்றிடுத்திருக்கும் சம்பவம் யாழ்ப்பாணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர், சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன், மாணவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி
யாழ்.போதனா வைத்தியசாலையில் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, மிகவும் சிறுவயதுடையவர் என்பதால் தாயாரும் மாணவிக்கு உதவியாக நின்றுள்ளார்.
மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டது.
அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவலும் வழங்கப்பட்டது.
நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையை பிரசவித்த மாணவியையும், அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பந்தப்பட்ட இளைஞனும் கைது
விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை துஷ்பிரயோகித்துக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்