யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, ஆலடிச்சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
தமழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்தப் பேரணி, நாளை 15 ஆம் திகதி நெல்லியடி மற்றும் அச்சுவேலியிலும், 16 ஆம் திகதி மானிப்பாய், நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் இடம்பெறும்.
இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வு சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.