எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு கூறியுள்ளார். ”பொதுஜன... Read more »
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் காரணமாக அரச தனியார் அலுவலகர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு... Read more »
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ஊடாக பெற்றோர் கைது செய்யப்படும் போது, அவர்களது வீடுகள் பாதுகாப்பற்றதாக மாறுவதுடன், சிறுவர்களை பாதாள உலக குழுக்களில் இணைவதற்கும், விபசாரத்தில் ஈடுபடுவதற்கு இட்டுச்செல்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »
தலவாக்கலை, லிந்துலை பெரிய இராணிவத்தை (ரஹான்வத்த) தோட்டத்தில் இன்று (04) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தோட்ட குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாரியளவிலான சேதம் தவிர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலினால் இரண்டு வீடுகள்... Read more »
வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி மாலை 3.00 மணி முதல் 5.30 வரை யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும்... Read more »
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும்... Read more »
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. விமான நிலையத்தில் நிலவும் பயணிகள் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்... Read more »
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பகல் வேளைகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன்... Read more »
மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் செய்வது அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி நேற்று இரவு வெளியிடப்பட்டது. Read more »
நாடளாவிய ரீதியில் இன்று (04) ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி, 2,302 பரீட்சை மத்திய நிலையங்களில் மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத்தவுள்ளனர். அத்துடன், 319 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சீரற்ற... Read more »