மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். சாந்தமாக செயல்படுவீர்கள். அடுத்தவர்கள் உங்களை என்னதான் சீண்டிப் பார்த்தாலும் நிதானத்திலிருந்து தவற மாட்டீர்கள். இதனாலேயே வரக்கூடிய பல பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். வேலையிலும் தொழிலிலும் வந்த பிரச்சனைகள் கூட வந்த பாதையிலேயே திரும்பும். நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தொழிலை விரிவு படுத்த புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் ப்ரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வேலையே இல்லாதவர்களுக்கு கூட கை நிறைய சம்பாத்தியத்துடன் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று விருத்தி அடையக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்யும் வேலைகள் உங்களுக்கு இரட்டிப்பு மடங்கு லாபத்தை கொடுக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தில் பெரிய அளவில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு சேமிப்பு செய்யலாம். எதிர்காலத்தில் நன்மை நடக்கக்கூடிய அத்தனை முயற்சிகளையும் இன்று மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடப்பதற்கு உண்டான சந்தர்ப்ப வாய்ப்புகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். முன்கோபடக்கூடாது, எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. புதிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளி வையுங்கள். உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். பண பரி வர்தனையில் கவனம் தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்துப் பார்க்காத நல்லது நடக்கும். நீண்ட நாள் வசூல் ஆகாத பணம் கையை வந்து சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்து சுகம் வாங்குவதற்கு யோகங்கள் கைகூடி வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் ஆபரண சேர்க்கையும் இருக்கும். ஆக மொத்தத்தில் இன்று உங்களுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்போடு இருப்பீர்கள். எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள். இந்த நாள் இறுதியில் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்கவும். ஆரோக்கியமான உணவை நேரத்திற்கு சாப்பிடவும். பிள்ளைகளின் எதிர்காலத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்துவீர்கள். யாரெல்லாம் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டீர்கள் என்று சொன்னார்களோ, அவர்கள் முன்பு ஜெயித்து காட்டுவீர்கள். வேகத்தை விட இன்று உங்களுக்கு விவேகம் தான் அதிகமாக இருக்கும். எதிரிகளின் முகத்தில் கறியை பூசக்கூடிய நாள் எது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நன்மைகள் பல நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது. மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தை நாடும். வியாபாரம் தொழில் எல்லாம் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். காலை நேரம் கொஞ்சம் சோம்பலோடு துவங்கினாலும், மாலை நேரத்தில் உற்சாகமடைவீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பாட்டனரை மட்டும் முழுமையாக நம்பி எந்த ஒரு வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று மேன்மையோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு உதவி செய்வீர்கள். பக்குவம் வெளிப்படக்கூடிய நாளாக அமையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். உற்சாகத்தில் ஒரு துளியும் குறையாது.