மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த வேலைகள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும் தொழிலிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவுகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சந்தோஷம் பிறக்கும். வருமானம் பெருகும் நாளாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. முக்கியமான விஷயத்திற்கு லேட்டாக போய் திட்டுவாங்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே இன்றைய நாள், தாமதமாக எந்த வேலையையும் செய்யாதீங்க. ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே எல்லா வேலையும் முடித்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் டென்ஷன் கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். பிரிந்த கணவன் மனைவி, சண்டை போட்டுக் கொண்ட கணவன் மனைவி ஒன்று சேர நல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். பிள்ளைகளால் மனது நிம்மதி இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். பொறுமையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை வீணாக செலவு செய்யாதீர்கள். நேரத்தை பயனுள்ளபடி மாற்றிக் கொண்டால் பிரச்சனையில் பாதி முடியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியை அடையும். கடன் சுமை குறையும். விவசாயிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும். சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் கூட, இன்று நிறைய பணத்தோடு வீட்டிற்கு செல்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல செய்தி உண்டு. மற்றபடி வேலை தொழில் எல்லாம் எப்போதும் போல சுமூகமாக செல்லும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பேராசை இருக்கும். வேலை தொழில் எல்லாவற்றிலும் அகலக்கால் வைப்பீர்கள். பேராசை பெரும் நஷ்டமாக வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்காதீங்க.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலையில் பெருசாக எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. வியாபாரமும் சுமூகமாக நடக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் நன்மை நடக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும். சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவு படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிச்சயம் வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கைகள் உண்டு.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று நலமாக இருப்பீர்கள். சுறுசுறுப்போடு இருப்பீர்கள். செய்ய முடியாத வேலையை கூட, உங்கள் கையில் கொடுத்தால் அதை சரியான நேரத்தில் செய்து கொடுப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்களைப் பார்ப்பவர்களுக்கு, உங்கள் மீது ஒரு பொராமை வரும் அந்த அளவுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆர்வக்கோளாறில் அடுத்தவர்களுடைய வேலையையும் சேர்த்து நீங்களே செய்வீர்கள். திறமைசாலிகளாக வலம் வருவீர்கள். ஒரு துளி அளவும் குறைபாடு வராது. வீட்டில் இருக்கும் பெண்கள் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். பெரியவர்கள் இடத்தில் நல்ல பெயரும் வாங்குவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு எஇன்று லேசாக பொறாமை குணம் இருக்கும். அடுத்தவர்களை பார்த்து நம்மால் இப்படி வாழ முடியவில்லை என்று ஏக்கம் அடைவீர்கள். சீக்கிரம் பணக்காரராக என்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்திப்பீர்கள். அவசரப்பட்டு குறுக்கு வழியில் போகாதீங்க. பொய் சொல்லாதீங்க. நிதானமாக இருங்கள். உங்களுக்கான நல்ல காலம் நிச்சயம் உங்களை தேடி வரும். கடமையில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்படவும்.