இரு முக்கிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

தேசிய சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய நியமனங்களுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான எம்.எஸ்.பி.சூரியப்பெரும ஆட்பதிவுக்கான பதில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more »

இளைஞனிடம் 15 இலட்சம் ரூபாய் பண மோசடி – ஒருவர் கைது

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபரை... Read more »

இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்த பாகிஸ்தான்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இஸ்லாமாபாத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் போது இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பாகிஸ்தான் திங்களன்று (07) நிராகரித்தது. இஸ்லாமாபாத்தில் நடைபெறும் SCO மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்லும் தூதுக்குழுவை... Read more »

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் மெத்தியூஸ்!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் எதிர்வரும் 2025 பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) சிட்டகாங் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். போட்டி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. டி20 கிரிக்கெட்டில் அனுபவமிக்க மெத்தியூஸ், சிட்டகாங் கிங்ஸ் அணிக்காக தனது அனுபவத்தை... Read more »

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) குறைவடைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 200,900 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 191,500 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை... Read more »

பனங்காடு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரை சந்தித்து அவ் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார். வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட பிராந்திய பணிப்பாளர் சுகாதார மேம்பாடு மற்றும்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் குறித்து வெளியான செய்தி

அரசு பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள்... Read more »

ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிக்கும் அரசாங்கம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்தை நிராகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வை காண... Read more »

விவசாயிகளுக்கான உர மானியம் திங்கள் முதல்!

உர மானியமாக நெல் விவசாயிகளுக்கு 25,000 ரூபாவை வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர ஊடகவியலாளர்... Read more »

கடந்த அரசாங்கத்தின் பல திட்டங்கள் இரத்து!

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இது தொடர்பான அமைச்சரவை... Read more »