கோவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.... Read more »

பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்

மாணவர்கள் மற்றும் பெற்றோர் அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார். பரீட்சை பெறுபேறுகளை அடையாளம் தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில்... Read more »
Ad Widget

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உத்தியோகபூர்வ எக்ஸ்... Read more »

வெற்றி, அறிவித்தார் மோடி! கூட்டணி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சு

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வாக்களர்கள் தனது கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் மோடி நன்றி தெரிவித்தார். அதேவேளை உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட மோடி 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்... Read more »

அநுராதபுரம் மாவட்டத்தில் மூடப்பட்ட நிலையில் 15 பாடசாலைகள்

அநுராதபுரம் மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். போதிய எண்ணிக்கையான மாணவர்கள் இல்லாத காரணத்தினால் இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர்... Read more »

ஆசன ஒதுக்கீடுகளை பகிர்வதற்கான ஒரு வியூகமே பொது வேட்பாளர் நாடகம்: சிறீரங்கேஸ்வரன்

இந்தியத் தேர்தல் களம் தற்போது நிறைவை எட்டியிருக்கும் நிலையில் இலங்கைத்தீவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வேட்பாளர் யார் என்ற கேள்வி அநேகமாக கேட்கப்பட்டு வரும் நிலையில் இந்தக் கேள்வி வடக்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை முன் வைக்க... Read more »

முடிவுக்கு வரும் எதிர்நீச்சல்… நேரம் மாற்றம்: எந்த சீரியல் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் அந்த இடத்தை நிரப்ப டாப் சீரியலின் நேரத்தை சன் டிவி மாற்றியுள்ளது. எதிர்நீச்சல் தொடர் நிறைவடையவுள்ளதை இத்தொடரில் உள்ள நடிக்கும் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.... Read more »

பிரேஞ்சு ஓபன் டென்னிஸ்: கால் இறுதிக்கு தகுதியான ஜோகோவிச்

பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் பாரிஸில் நடைபெற்று வருகிறது. அதில், உலகின் முதல் நிலை வீரரும் 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவருமான செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் நான்காவது சுற்றில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவுடன் மோதினார். இந்தப் போட்டியில் 6-1,5-7,3-6 7-5,6-3 என்ற செட்... Read more »

சீனாவை உளவு பார்க்கிறதா பிரித்தானியா?

பிரித்தானியாவைச் சேர்ந்த ‘MI6‘ என்ற உளவுச் சேவையொன்று சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இதேவேளை, சீனாவின் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் தம்பதியொன்று பிரித்தானியாவைச் சேர்ந்த M16 என்ற உளவு அமைப்பிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.... Read more »

தொடர் போராட்டத்தில் குதித்த வட மாகாண அரச சாரதிகள்

வட மாகாண அரச சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் இன்று இரண்டாம் நாளாக ஈடுப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால்,... Read more »