அரசியல் தலையீட்டால் பதவியை துறக்க தயாராக இருக்கும் வடக்கின் முதலாவது அதிகாரி.

அரசியல் தலையீட்டால் பதவியை துறக்க தயாராக இருக்கும் வடக்கின் முதலாவது அதிகாரி.

தான் வழங்கிய இடமாற்றத்தை அரசியல் தலையீட்டினால் பிறிதொரு இடத்திற்கு மாற்றிய காரணத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளான அதிகாரி ஒருவர் தனது பதவியை மட்டுமல்ல அரசு சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனது காரியாலயத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி ஒருவர் ஒழுங்காக கடமைகளை செய்வதில்லை ஒழுங்கான நேரத்துக்கு கடமை இடங்களுக்கு செல்வதில்லை என்ற காரணத்தினால் அவருக்கான இடமாற்றத்தினை மேலதிகாரி வழங்கியிருந்தாராம்.

ஆனால் தனது கணவருடைய செல்வாக்கை பயன்படுத்தி குறித்த மேலதிகாரி வழங்கிய இடம் மாற்ற இடத்துக்கு செல்லாமல் தனக்கு இசைவான இடத்துக்கு அரசியல் தலையிட்டை பயன்படுத்தி பணி இட மாற்றத்தை மாற்றியுள்ளாராம்.

இதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான மேல் அதகாரி தனது சுய விருப்பத்தின் பேரில் அரச சேவையில் இருந்து விலகுவதாக எழுத்து மூலம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விரைவில் இருவருடைய பெயர்களும் பகிரங்கப்படுத்தப்படும்!!!!!

Recommended For You

About the Author: admin