கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..!
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
முகமாலை வடக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டினை சுத்தம் செய்யும் போது பள்ளம் தோண்டி உள்ளார் அப் பிரதேசத்தில் ஆபத்தான நிலையில் எறிகணைகள் காணப்பட்டுள்ளன உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை பொலிஸார்க்கு அறிவித்துள்ளனர்
அதன் பின்னர் கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டிகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

