காதலியார் சம்மளங்குளம் முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்திற்கு சமையல் பாத்திரங்கள் வழங்கிவைப்பு..!
சர்வதேச முதியோர் தினத்தில் இன்றைய தினம்(01) முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காதலியார் சம்மளங்குளம் முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சமையல் பாத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
சர்வதேச முதியோர் தினமான இன்றைய நாளில் குறித்த முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்திற் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.ஜெயகாந்(காணி) அவர்களின் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பகல் பராமரிப்பு நிலையத்தின் முதியோர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வினைப் பெற்றுத்தர முயல்வதாகவும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு.நிசாந்தன், உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, பிரதேச முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலகர் பகல் பராமரிப்பு நிலையத்தின் நிர்வாகத்தினர், முதியோர் எனப் பலரும் கலந்துசிறப்பித்தனர்.


