வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது.
மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி போட்டி 50 ஓவர்களுக்கு பதிலாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில், அமன்ஜோட் கவுர், தீப்தி ஷர்மா ஆகியோர் அரை சதம் விளாசினர். இலங்கை அணியின் இனோகா ரணவீர அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், களமிறங்கிய இலங்கை அணி 45.4 ஓவர்களில் 211ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் தீப்தி ஷர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
#INDWvsSLW #WomensWorldCup #Cricket

