முள்ளிவாய்க்கால் கஞ்சி, தியாக தீபம் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றும் வழங்கப்பட்டது . இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். Read more »
தமிழினம் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக ஆண்டு தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் சிங்களப் பேரினவாத அரசாங்கம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லத்திட்டமிட்டுள்ளது என்பதை சட்டத்தரணி க. சுகாஷ் வெளிப்படுத்தியுள்ளார். தமிழினப் படுகொலையை முள்ளிவாய்க்காலில்... Read more »
கிளிநொச்சி மாவட்டம் – உருத்திரபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதானது இனகுரோதத்தின் உச்சமாகவே நோக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை இலங்கை ஜனாதிபதி... Read more »
இலங்கையில் இன்று (17) பல மாகாணங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவ, வடமேல், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில், மாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ... Read more »
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டங்களை பாராட்ட வேண்டும் என உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன்... Read more »
நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் வெப்பம் வளிமண்டலவியல் திணைக்களத்தின்... Read more »
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும்... Read more »
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் மட்டும் 412 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்,... Read more »
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, உரிமம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 23, 2023 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரும் சலுகை கிடைத்துள்ளதாக... Read more »
யாழ் கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் 65 வயதான கார்த்திகேசு திருப்பதி எனும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் தனக்குத்தானே தீயை மூட்டி உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வுப் பெற்ற... Read more »

