இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் மட்டும் 412 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு 19 ஆவது வார நிறைவில், 1294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த ஆண்டின் 19ஆவது வார நிறைவில் 2029 டெங்கு ​நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் பதிவான 412 டெங்கு நோயாளர்களில் 261 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர்.

இவர்களில் 132 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள். கம்பஹா மாவட்டத்தில் 98 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் புகைக்கான இரசாயனம், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor