தமிழினம் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக ஆண்டு தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் சிங்களப் பேரினவாத அரசாங்கம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லத்திட்டமிட்டுள்ளது என்பதை சட்டத்தரணி க. சுகாஷ் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழினப் படுகொலையை முள்ளிவாய்க்காலில் தமிழினம் திரண்டு நினைவுகூரும் நாளைய மே 18 நாளில், கிளிநொச்சி உருத்திரபுரீச்சரத்தை ஆக்கிரமிக்கத் தொல்லியல் திணைக்களம் திட்டம் தீட்டியுள்ளது.
ஆகவே நாளை தினம் முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்கு முதல் அனைவரும் கிளிநொச்சி உருத்திரபுரீச்சரத்தில் ஒன்றுகூடுவோம் என
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.