கேக் வெட்டி புத்தாண்டை சிறப்பித்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர்.
2026 புதிய வருடத்திற்கான நிகழ்வுகள் இன்றைய தினம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது சபையின் உத்யோகத்தர்கள், ஊழியர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் தேசியக்கொடி, பிரதேசசபைக்கான கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டன. புதிய ஆண்டிற்கான சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதுடன் அனர்த்தங்களில் உயிர் நீத்த உறவுகளிற்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தவிசாளர் அவர்களினால் இன்றைய நாள் மகிழ்வாகவும் இனிமையானதாகவும் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக சபையினருக்கு இனிப்புப்பண்டங்கள் வழங்கி வைத்தார்
இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் புத்தாண்டை சிறப்பிக்கும் வண்ணம் வருகை தந்து தவிசாளரிற்கு சில அன்பளிப்புக்கள் வழங்கினர்.
சபை உத்தியோகத்தர்கள் அலுவலக ஆடை அறிமுகத்துடன் வருகை தந்திருந்திருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறி , பால் பொங்கல் உண்டு தமது புதிய ஆண்டிற்கான கடைமைகளை கண்ணியத்துடன் ஆரம்பித்தனர். Paskaran Tamilan பாஸ்கரன் ஆதரவாளர்கள்

