ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறிய பிரபல நாட்டு தலைவர்கள்

சீசெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதியின் கீழ் இலங்கை அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை அடையும் என சீசெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன்(Wavel Ramgalavan),... Read more »

வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது... Read more »
Ad Widget

யாழில் மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடுகள்

யாழ் காரைநகர் கிழக்கு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடுகள் மர்ம கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய நாட்களாக கும்பல் ஒன்று காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பத்தில் ஈடுபட்டிருக்கின்றது. இதன் தொடராக, குறித்த நபர்களால்... Read more »

யாழில் உயிரை மாய்த்து கொண்ட மாணவி!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான முடிவு எடுத்து நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். மூன்றாவது முறையாக... Read more »

யாழில் போலி நாணய தாள்களுடன் நபரொருவர் கைது!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடம் 3 கடைகளில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய்... Read more »

இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பு!

நாட்டில் இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, இலங்கை மின்சார சபைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்றைய தினம் வழங்கியிருந்தது. கடந்த 8 வருடங்களின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். Read more »

ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட ஆபத்தான வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிப்பு!

இலங்கையில் தற்போது பரவி வரும் B.A4 மற்றும் B.A5 கோவிட் மாறுபாடு நுரையீரலை சேதப்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வளவாளர் மருத்துவர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிலும் இவ்வகையான கோவிட்... Read more »

சிங்கப்பூரில் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும் கோட்டபாய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் விஜயம் நாளை (11) காலாவதியாகவிருந்த நிலையில், அவர் மேலும் சில வாரங்கள் தங்குவதற்கு விசா வசதிகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, கோட்டாபய... Read more »

சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் லங்கா சமசமாஜ கட்சி

சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். பொதுமக்களின் வாழும் உரிமையை உறுதி செய்தல், அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியனவற்றை உறுதி செய்வதனை முதன்மைப்படுத்தி ஆதரவளிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கு... Read more »

அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல்!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்குவது கூட மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அவர்களின் கடந்த மாத சம்பளமும் மிகவும் சிரமப்பட்டு வழங்கப்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். சம்பளம் கொடுப்பதில் சிக்கல் இந்நிலைமைக்கு... Read more »