அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. சட்டம் பெளத்த மதத்திற்கு அடிபணிய கூடாது.. வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு போராட்டம்.
அனுராதபுர சிறுமி பௌத்த துறவியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மதத்தின் பெயரால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்க கூடாது என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் கோரிக்கை முன்வைத்தார்.
இன்று புதன்கிழமை யாழில் அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


