( யாழ். நிருபர் ரமணன் )
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91 ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (15 – 10- 2022) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வேலணை சுகுமாரால் அப்துல் கலாமின் மணற் சிற்பம் உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் (ஜனாதிபதி) குடியரசுத் தலைவர், விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் 91 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று 15.10.2022 காரைநகர் கசூரினா கடற்கரையில் வேலணை சுகுமாரின் கைவண்ணத்தில் கலாம் அவர்களின் பிரமாண்ட மணற்சிற்பம் உருவாக்கப்பட்டது.
இதேவேளை, யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கு தமது இதய அஞ்சலியை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்தியத் தூதரக அலுவல அதிகாரிகளும் அப்துல் கலாமின் மணற் சிற்பத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.