நாட்டில் தற்போது போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக பாலுணர்வைத் தூண்டும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஹோட்டல் அறைகளில் இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
திடீரென மரணமடையும் இளைஞர்கள்
திடீரென மரணமடையும் இளைஞர்களின் பெரும்பாலான பிரேதப் பரிசோதனைகளில், அவர்கள் துணையுடன் இருந்த போது உடனடியாக பாலுறவு தூண்டும் மருந்துகளை உட்கொண்டது தெரியவந்துள்ளதாக கொழும்பு மேலதிக மரண விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர்களில் குறிப்பாக இருபது முதல் முப்பத்தேழு வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மருத்துவ ஆலோசனையின்றி பல்வேறு வகையான பாலுறவு தூண்டும் மருந்துகளைப் பயன்படுத்தத் தூண்டப்படுகிறார்கள்.
மருத்துவ ஆலோசனையின்றி பல்வேறு மருந்துகளை பயன்படுத்துவதால் கொழும்பு நகரில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஐந்து இளைஞர்கள் உயிரிழப்பதாக மரண விசாரணை நீதிமன்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற இளைஞர்கள் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளை உட்கொண்டால், அதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.