ஈரான் தனது ராணுவ வலிமையை போர்க்களத்தில் நிரூபிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defense Systems) ஒவ்வொன்றாகப் போர்க்களத்தில் அறிமுகப்படுத்தப்படும் என ஈரான் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
“எங்கள் நாட்டின் வான்பரப்பை நாங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்துவோம்; கோழைத்தனமான எதிரிகளின் அவமானத்தை உலகிற்கு முன்னெப்போதையும் விட அதிகமாக நிரூபிப்போம்” என்று ஈரான் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நவீன ஏவுகணைகளை இடைமறிக்கும் மற்றும் எதிரி நாட்டு போர் விமானங்களை முறியடிக்கும் புதிய தொழில்நுட்பங்களை ஈரான் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

