ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானுடனான உடன்படிக்கையை எட்டுவதற்கு இன்னும் 48 மணிநேர அவகாசம் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் இந்த நெருக்கடியில், குறிப்பாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது தொடர்பிலேயே இந்த இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானினால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15E போர் விமானத்தின் விமானி ஒருவரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறித்த விமானி ஈரானியப் பகுதியில் உயிருடன் இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், அவரைத் தேடும் பணிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இருப்பினும், ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள இந்த 48 மணிநேரக் கெடுவானது விமானி மீட்பு தொடர்பானது அல்ல என்றும், சர்வதேச எரிசக்தி விநியோகத்திற்கு முக்கிய அங்கமான ஹார்முஸ் நீரிணை தடையை நீக்கி வர்த்தகப் பாதையைத் திறப்பதற்கானது என்றும் அல் ஜசீரா செய்திச் சேவை தெளிவுபடுத்தியுள்ளது.

ஏப்ரல் 6ஆம் திகதிக்குள் ஈரான் இணக்கப்பாட்டிற்கு வராத பட்சத்தில், அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார். இந்தத் திகதி நெருங்கி வருவதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அதிரடியாக உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin