IPL 2026இன் அதிவேகப் பந்துவீச்சு! – வேகத்தில் மிரட்டிய அசோக் சர்மா

அஹ்மதாபாத்தில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் வீரர் அசோக் சர்மா புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
23 வயதான அசோக் சர்மா, போட்டியின் 16ஆவது ஓவரின் கடைசிப் பந்தை மணிக்கு 154.2 கிலோமீற்றர் வேகத்தில் வீசி, நடப்பு ஐபிஎல் தொடரின் அதிவேகப் பந்துவீச்சாளராக மகுடம் சூடினார்.

இதன் மூலம் என்ரிச் நோர்கியாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த இளம் மிதவேகப் பந்துவீச்சாளர், பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் திறமைக்காகப் பாராட்டப்படுபவர்.

2022இல் 55 இலட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட இவர், பின்னர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு மாறி, தற்போது 2026 ஏலத்தில் 90 இலட்சம் ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

அசோக் சர்மா இதுவரை 11 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தனது அபாரமான திறமையை நிரூபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin