கீழுழைப்புச் சேவை பட்டதாரிகள் தொடர்பில் சஜித்தின் கோரிக்கை..!

கீழுழைப்புச் சேவை பட்டதாரிகள் தொடர்பில் சஜித்தின் கோரிக்கை..!

ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையில் திறந்த ஆட்சேர்ப்பிற்கான பட்ட தகுதி செல்லுபடியாகும் திகதி 2025.06.30 ஆம் திகதி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்சமயத்தில் திறந்த சேவையில் இணைய விரும்பியவர்கள் தமது கோரிக்கைகளை என்னிடம் தெரிவித்தனர்.

இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து, அந்த செல்லுபடியாகும் திகதி 2026 மார்ச் 05 ஆம் திகதி என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் நல்லதொரு விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழ அதன் தலைவர் ஹேஷா விதானகே தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய வேளையில், ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் எழுந்து காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பிற்கான செல்லுபடியாகும் திகதி 2023.02.10 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தி, இந்த திகதியையும் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்சமயத்தில் நமது நாட்டில் அரச சேவையில் உயர் தகுதி பெற்ற பலர் கீழுழைப்புச் சேவையில் பணிபுரிந்து வருகின்றனர்.

கீழுழைப்புச் சேவை பட்டதாரிகள் அரச சேவையின் கீழ்மட்ட தரங்களில் சேவையாற்றி வருகின்றனர். இன்றும் கூட, இளமானி மற்றும் முதுமானி பட்டங்களைப் பெற்று, அரச சேவையில் அலுவலக உதவியாளர்களாக, தொழிலாளர்களாக, ஆய்வக உதவியாளர்களாக பணிபுரிவோர் ஏராளமாக காணப்படுகின்றனர்.

கீழுழைப்புச் சேவை பட்டதாரிகளுக்கு நாட்டின் இலவசக் கல்வி முறையில் கற்பித்தல் சேவைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதிகளுடன் அரச சேவையில் இணைந்து தொடர்ந்து கல்வி கற்று முதுமாணிக்க பட்டம் வரை தமது கல்வியை முன்னேற்றிக்கொண்டிருப்பதால், இவர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இவர்களுக்கும் ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதேபோல், தொல்லியல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பெரும் எண்ணிக்கையிலானோர் காணப்படுகின்றனர். வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், இவர்களால் வரலாறு கற்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றன.

இவர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி நீதியை நிலைநாட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொண்டு மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin