முக்கியச் செய்தி: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது!

முக்கியச் செய்தி: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது!

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்குகளில், பிரிட்டனின் முன்னாள் இளவரசர் அண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor) இன்று (பிப்ரவரி 19, 2026) பிரிட்டிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

📍 அரசுப் பதவியிலிருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக (Misconduct in Public Office) இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரிட்டனின் வர்த்தகத் தூதராக இருந்தபோது, ரகசிய அரசுத் தகவல்களை ஜெப்ரி எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

நோர்போக்கில் (Norfolk) உள்ள சாண்ட்ரிங்ஹாம் (Sandringham) தோட்டத்தில் வைத்து தேம்ஸ் வேலி (Thames Valley) காவல்துறையினர் இவரைக் கைது செய்தனர்.

 

இது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள மன்னர் சார்லஸ், “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகளால் கடந்த ஆண்டே அண்ட்ரூ தனது அரசப் பட்டங்களையும், கௌரவங்களையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இன்று தனது 66-வது பிறந்தநாளிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு எங்களைப் பின்தொடரவும்.

Recommended For You

About the Author: admin