கிரிஷ் விவகாரம் -நாமலுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு 

கிரிஷ் விவகாரம் -நாமலுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான ‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு ஒத்திவக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அது எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் றக்பி (Rugby) விளையாட்டை மேம்படுத்துவதற்காக எனக் கூறி, இந்தியாவின் கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்று, அதனைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் பணச்சலவை செய்தமை தொடா்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அகில இலங்கை ரீதியில் சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகியிருந்தனர். இதனால் வழக்கை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவர்ணதுருகொட முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.

இன்றைய விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சில ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், அடுத்த கட்ட விசாரணைகள் பெப்ரவரி 19 அன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin