ஸ்வீடன் இளவரசி சோபியா – ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்தார்!

ஸ்வீடன் இளவரசி சோபியா – ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்தார்!

ஸ்வீடன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி சோபியா (Sofia Hellqvist, 41) ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் முதல் முறையாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்த பின்னர் மரணமடைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் அண்மையில் அமெரிக்க நீதி துறையால் வெளியிடப்பட்ட நிலையில், 2012ஆம் ஆண்டு நியூயோர்க் நகரில் நடைபெற்ற Les Miserables திரைப்படத்தின் தனியார் திரையிடல் மற்றும் இரவு விருந்தில், இளவரசி சோபியா எப்ஸ்டீனின் விருந்தினராகப் பட்டியலிடப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

2015ஆம் ஆண்டு ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் அவர்களை திருமணம் செய்து அரச குடும்பத்தில் இணைந்த சோபியா, திருமணத்திற்கு முன்பு நியூயோர்க் சமூக வட்டாரங்களில் அடிக்கடி கலந்து கொண்டவராக அறியப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து பேசிய அவர்,

“என் இருபதுகளில் சில சமூக நிகழ்வுகளில் அவரை சந்தித்தது உண்மை. ஆனால் இப்போது அவர் இளம் பெண்களுக்கு செய்த கொடூர குற்றங்களைப் பற்றி படிக்கும் போது, அதற்குப் பிறகு அவருடன் எந்தத் தொடர்பும் இல்லாததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக உள்ளேன்.

பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் என் எண்ணங்கள் செல்கின்றன. இந்த விவகாரத்தில் நீதியுண்டாகும் என நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆவணங்களில், 2012ஆம் ஆண்டு விருந்தினர் பட்டியலில் சோபியாவின் பெயர் இடம்பெற்றுள்ளதுடன், அதற்கு எப்ஸ்டீன் “Amazing!!!” என்று பதிலளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்தி தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Recommended For You

About the Author: admin