தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி..!

தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி..!

பொதுவாக சகல கட்சிகளும் அனுபவத்தின் அடிப்படையிலும், பாராளுமன்ற உறுப்பினர்களில் நீண்ட அனுபமுள்ளவர்கள் பொருத்தமான ஒருவரை பாராளு மன்ற குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதே நடைமுறை.

 

பாராளுமன்ற குழுத் தலைவர்களின் கடமைகள்:

 

தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல், கொள்கைகளை வகுத்தல், நாடாளுமன்ற விவாதங்களில் கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்தல், குழு விவாதங்களை வழிநடத்துதல், ஒழுங்குப் பிரச்சனைகளைக் கையாளுதல் குழுவின் பணிகளை நடுநிலையுடன் நிர்வகித்தல், மற்றும் தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஒற்றுமையாக வழிநடத்தல் ஆகிய முக்கிய கடமைகளை வகிக்கின்றனர். இதுவே பொதுவான கடமைகள்.

 

🫵🏼தற்போதைய 10வது பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களையும், இலங்கை தமிழ் அரசு கட்சி 08 ஆசனங்களையும், புதிய ஜனநாயகமுன்னணி 05 ஆசனங்களையும், பொதுசன முன்னணி 03, ஆசனங்களையும், ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் 03, ஆசனங்களையும்,

பெற்று ஆறு கட்சிகளுக்கும் 06, பாராளுமன்ற குழுதலைவராக உள்ள அதேவேளையில் தனியாக ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக கொண்ட06, கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுடைய கட்சி பாராளுமன்ற குழு தலைவர்களாகவே கருதப்படும்.

 

உதாரணமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்,

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சுயேட்சைகுழு 17, ன் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா ஆகியோரும் பாராளுமன்ற குழுத்தலைவர்களாகவே கருதப்படுவர்.

 

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் குழுத்தலைவர் இருப்பது நாடாளுமன்ற செயல்பாட்டிற்கு மட்டும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

 

இப்போது இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவராக 2024, நவம்பர்,20, தொடக்கம் செயல்பட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பின் சி.சிறிதரனை கடந்த 2026, பெப்ரவரி,03, ல் நீக்கி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அந்தபதவி வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழரசுக்கட்சியில் தற்போதுள்ள எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக இந்த தெரிவு இடம்பெறவில்லை.

கட்சி பதில் செயலாளருடைய தனி விருப்பாக தற்போது ஏற்கனவே பதவி வகித்த சிறிதரனின் பதவி மாற்றப்பட்டுள்ளது..

 

இந்த விடயம் சரியா தவறா என்பதை நான் விவாதிக்கவில்லை,

 

ஆனால் இந்த பதவி மாற்றம் ஊடகங்களில் வெளிவந்த பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி சபை மாநகர முதல்வர், சில பிரதேசசபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், கட்சி கிளை உறுப்பினர்கள் எல்லோருமில்லை ஒருசிலர் மட்டும் இந்த பதவி மாற்றத்திற்கு பின்னர் நடந்து கொண்ட விடயங்கள் சரியானதா என்பதே எனது கேள்வி..?

 

இதில் கட்சி உறுப்பினர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும் இலங்கை தமிழ் அரசுக்கட்சியில் உள்ள ஒரு உறுப்பினரிடம் இருந்த பதவி அதே இலங்கை தமிழ்சுகட்சியில் உள்ள இன்னொருவருக்கு மாற்றப்பட்டது.

இருவரும் ஒரே கட்சி சார்ந்தவர்கள் மாவட்டங்கள் மட்டுமே இரண்டு.

ஒருவர் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,

மற்றவர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.

 

இதற்கு ஏன் வாழ்த்து வெனர் கட்டவேண்டும்?

இதற்கு ஏன் பட்டாசு கொழுத்த வேண்டும்?

இதற்கு ஏன் இனிப்பு, சொக்லட், ரொபி, கேக் பகிரவேண்டும்?

 

சிறிதரன் மாற்றுக்கட்சி சஜீத், நாமல்,ஹக்கீம் கட்சியில் பாராளுமன்ற குழு தலைவராக பதவி வகித்ததை இலங்கை தமிழ் அரசுக்கட்சி பறித்து எடுத்திருந்தால் இதனை பொன்னாடை, மலர்மாலை, பட்டாசு, விருந்தோம்பல், கூட்டம் என மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.அது தவறில்லை.. !

 

ஒரு கட்சிக்குள் பதவி மாற்றத்தை வைத்து பிரதேச ரீதியாக ஏதோ மட்டக்களப்புக்கு பிரதமர் பதவி கிடைத்தது போன்று கீழ்த்தரமான பிரதேசவாதங்களை பரப்பி இவ்வாறு ஒரே கட்சியில் உள்ளவர்கள் நடந்துகொண்டது சரியானதா என மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்..?

 

இது மாற்றுக்கட்சிக்காறர்களும், எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் அவல் கொடுக்கும் செயல் என்பதை ஏன் புரியவில்லை?

 

இதன் வெளிப்பாடு எதை காட்டுகிறது என்ரால் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இரண்டு அணிகளாக தொடர்கிறது. அவர்களை திருத்தமுடியாது,

கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நிருபிக்க காட்டப்பட்ட படங்களும், நாடகங்களுமே இது.

 

இதன் பிரதிபலிப்பு இப்போது இனிப்பு கொடுப்பவர்களுக்கும் இனிப்பு கொடுக்க தூண்டியவர்களுக்கும் தெரியாது இது எப்போது கசப்பாக மாறும் என்ரால் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் ( வடக்குமாகணசபை, கிழக்கு மாகாணசபை) இரண்டு சபைகளிலும் தமிழரசுக்கட்சிக்கு பாரிய வீழ்ச்சியும், படு தோல்வியையும் நிச்சயம் தரும்.

அப்போது இதே இனிப்பை மாற்றுக்கட்சி கொடுக்கும்போது உணரலாம்..!

 

இந்த கருத்து எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..!

இவ்வாறு தெரிவிக்கிறார்.

-பா.அரியநேத்திரன்.

07/02/2026.

Recommended For You

About the Author: admin