பிாித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை
பிாித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (Met Office) மஞ்சள் நிற எச்சரிக்கையை (Yellow Weather Warning) விடுத்துள்ளது.
தற்போது நிலவும் அதீத பனிப்பொழிவு, கடும் காற்று மற்றும் மழை காரணமாக போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்வில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள், ஸ்கொட்லாந்தின் சில பகுதிகள் மற்றும் லண்டனைச் சுற்றியுள்ள தென்கிழக்கு பகுதிகளில் இந்த எச்சரிக்கை அமுலில் உள்ளது.
வீதிகள் மற்றும் புகையிரத தண்டவாளங்களில் பனி படிந்துள்ளதால் பயண நேரங்கள் அதிகரிக்கக்கூடும். சில இடங்களில் வீதிகள் மூடப்படலாம் எனவும் கடும் காற்றினால் மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
சில தாழ்நிலப் பகுதிகளில் மழை காரணமாக வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மஞ்சள் நிற எச்சரிக்கை இன்று (ஜனவரி 30) மற்றும் நாளை வரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பயணங்களை மேற்கொள்ளும்போது பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

