பிரித்தானியாவில் குடியேற ஆசையா? போலி வேலைக்கு ஆசைப்பட்டு ஏமாறவேண்டாம்!!!

பிரித்தானியாவில் குடியேற ஆசையா? போலி வேலைக்கு ஆசைப்பட்டு ஏமாறவேண்டாம்!!!

பிரித்தானியாவில் (Britain) எப்படியாவது குடியேறி விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அப்பாவி மக்களை குறிவைத்து, சில மோசடி கும்பல்கள் போலி வேலைகளை விற்பனை செய்து வரும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடியால், அப்பாவிகள் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

பிரித்தானியாவில் எப்படியாவது ஒரு நல்ல வேலையில் சேர்ந்து செட்டில் (settle) ஆகிவிட வேண்டும் என்று பலரும் கனவு காண்கிறார்கள். இந்த கனவை நனவாக்க, சிலர் குறுக்கு வழியில் செல்ல நினைக்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தும் மோசடி கும்பல், போலி வேலைகளை தயார் செய்து, அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறது.

📄போலி ஆவணங்கள்!

சட்டவிரோத குடியேற்ற சந்தையில் பணம் சம்பாதிக்க சில விசா ஏஜென்ட் நிறுவனங்கள் போலியான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்த போலி விசா ஏஜெண்டுகள், சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைய ஆசைப்படும் நபர்களுக்கு, மாதம் 55,000 பவுண்ட் சம்பளம் வாங்குவது போல போலி ஆவணங்களை தயார் செய்து தருகின்றனர்.

👨🏻‍🏫பயிற்சி கொடுக்கும் ஏஜெண்டுகள்!

போலி விண்ணப்பம், வங்கி கணக்கு, சம்பள ஆவணங்கள் என அனைத்தையும் தயார் செய்து தருகின்றனர். அதுமட்டுமில்லாமல், யாராவது கேள்வி கேட்டால் எப்படி சமாளிப்பது என்றும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

📰டைம்ஸ் நாளிதழ் அம்பலம்!

டைம்ஸ் நாளிதழ் (The Times) நடத்திய ரகசிய விசாரணையில், போலி விசா ஏஜெண்டுகள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களிடம் மாதாந்திர கட்டணம் வசூலிப்பதும், முன்பணமாக 20,000 பவுண்டுகள் வரை பெறுவதும் தெரியவந்துள்ளது. போலி வேலை மூலம் சட்டப்பூர்வமாக வேலை செய்ய முடியாது. பிடிபட்டால் நாடு கடத்தப்படலாம். ஆனால் விசா ஏஜெண்டுகளுக்கு கமிஷன் (commission) கிடைத்துவிடும்.

🤷ஏஜெண்டுகளின் அலட்சியம்!

ஒரு ஏஜென்ட் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “எங்களிடம் எந்த வேலையும் இல்லை. நாங்கள் ஸ்பான்சர்ஷிப் சான்றிதழை (certificate of sponsorship) மட்டுமே விற்பனை செய்கிறோம்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

❌எங்கு நடக்கிறது?

பிரிட்டனில் பல ஏஜெண்டுகள் செயல்பட்டு வருவதாக அந்த நாளிதழ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அலுவலக வேலைகள், ஐடி (IT), மார்க்கெட்டிங் (marketing) போன்ற வேலைகளுக்கு இரண்டு நிமிடத்தில் போலி ஆவணங்களை தயார் செய்துவிடலாம் என்று ஒரு ஏஜென்ட் பெருமையாக கூறியுள்ளார். நர்சிங் உதவியாளர், கொத்தனார் மற்றும் கிராஃபிக் டிசைனர் (graphic designer) போன்ற வேலைகளுக்கும் போலி ஆவணங்கள் தயார் செய்யப்படுகின்றன.

உள்துறை அலுவலகம் நடவடிக்கை!

எல்லைகளைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று உள்துறை அலுவலகம் (Home Office) தெரிவித்துள்ளது. 2025 ஜூன் மாதத்தில் 1,948 முதலாளிகளின் ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளை விசாரித்து வருவதாகவும், அதை அனுமதிக்க முடியாது என்றும் அந்த துறை கூறியுள்ளது.

🇬🇧அரசாங்கத்தின் தோல்வி!

டைம்ஸ் நாளிதழின் கண்டுபிடிப்புகள் அதிர்ச்சியளிப்பதாக கன்சர்வேடிவ் கட்சியின் (Conservative party) உள்துறை செயலாளர் கிறிஸ் பிலிப் (Chris Philp) கூறியுள்ளார். மேலும் அரசாங்கத்திற்கு குடியேற்றம் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த பிரச்சினையை உடனடியாக கையாள வேண்டும் என்று ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) கேட்டுக்கொண்டுள்ளார்.

❌விதிமீறல்!

லிபரல் டெமாக்ரட் கட்சியின் (Liberal Democrat party) உள்துறை செய்தி தொடர்பாளர் மேக்ஸ் வில்கின்சன் (Max Wilkinson) கூறியதாவது: “குற்றக் கும்பல்கள் லாபம் ஈட்டுகின்றன. விதிகள் மீறப்படுகின்றன. அரசாங்கம் உடனடியாக இந்த முறையை சரி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

🚷விதிமுறைகள் என்ன?

குற்றவியல் தண்டனை பெற்றவர்கள் வேலை வழங்குவதற்கான உரிமம் பெற முடியாது என்று Gov.uk இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. முதலாளிகள் ஸ்பான்சர் செய்யும் தொழிலாளர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை பிரிட்டன் விசா மற்றும் குடிவரவுத்துறை (UK Visas and Immigration) ஆய்வு செய்யும். நீங்கள் நம்பகமானவரா என்பதை உறுதிப்படுத்த உங்கள் நிறுவனத்திற்கு அவர்கள் வருகை தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin