46 மில்லியன் ரூபா வருமான விபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் அனுஷ பெல்பிட்ட கைது

46 மில்லியன் ரூபா வருமான விபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் அனுஷ பெல்பிட்ட கைது

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (ஜனவரி 23, 2026) காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையான அனுஷ பெல்பிட்ட, அங்கு பதிவு செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தை அடுத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

அவர் ஈட்டியதாகக் கூறப்படும் 46 மில்லியன் ரூபாய் வருமானம் எவ்வாறு கிடைத்தது என்பதை வெளிப்படுத்தத் தவறியமை மற்றும் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையான அவரிடம் சுமார் பல மணிநேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட அனுஷ பெல்பிட்ட, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அனுஷ பெல்பிட்ட ஏற்கனவே கடந்த காலங்களில் ‘சில் துணி’ விநியோக வழக்கு போன்ற பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போதைய கைது புதிய வருமான விபரங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

Recommended For You

About the Author: admin