உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறியது!
இன்று (ஜனவரி 22, 2026), அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் (World Health Organization – WHO) இருந்து தனது ஒரு வருட கால வெளியேறும் காலக்கெடுவை முடித்து, அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது.
ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2025 ஆம் ஆண்டு பதவியேற்ற முதல் நாளில் இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதன் தொடர்ச்சியாக, ஓராண்டு முன்னறிவிப்பு காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
கோவிட்-19 போன்ற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை WHO சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு. இந்த அமைப்பு சில நாடுகளின் (குறிப்பாக சீனாவின்) அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்டுச் செயல்படுவதாகக் கூறப்படும் விமர்சனம். அமெரிக்கா அதிக அளவிலான நிதியை வழங்கினாலும், அதற்கு ஏற்ற பலன் அமெரிக்க மக்களுக்குக் கிடைக்கவில்லை என்ற அரசின் நிலைப்பாடு முதலாவை வெளியேற்றத்திற்கான முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டுள்ளன.
⚠️ WHO-வின் மொத்த பட்ஜெட்டில் சுமார் 18% நிதியை வழங்கி வந்த அமெரிக்கா விலகியுள்ளதால், அந்த அமைப்பில் தற்போது கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக 2026-ன் பாதியிலேயே சுமார் 25% பணியாளர்களைக் குறைக்க WHO திட்டமிட்டுள்ளது.
போலியோ ஒழிப்பு, எச்.ஐ.வி சிகிச்சை மற்றும் புதிய வைரஸ் கண்காணிப்பு போன்ற சர்வதேச சுகாதாரத் திட்டங்கள் இந்த முடிவால் பின்னடைவைச் சந்திக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், சுமார் $260 மில்லியன் நிலுவைத் தொகையை அமெரிக்கா இன்னும் செலுத்தவில்லை என்பதால், சர்வதேச சட்ட ரீதியாக இந்த வெளியேற்றம் குறித்து அடுத்தடுத்த மாதங்களில் WHO-வின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

