150தொன் தங்கத்தை கொள்வனவு செய்கிறது போலந்து!
போலந்து நாட்டின் மத்திய வங்கி (National Bank of Poland – NBP) தனது பொருளாதார வலிமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில், புதிதாக 150 தொன் தங்கம் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை மூலம் போலந்தின் மொத்த தங்க இருப்பு 700 தொன்னாக உயரும். இதன் விளைவாக, உலக அளவில் தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளின் (Global Top 10) பட்டியலில் போலந்து இணையவுள்ளது!
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பணவீக்கத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்க தங்கம் ஒரு சிறந்த கவசமாகும் என போலந்து கரதுகிறது.
அத்துடன் அதிகப்படியான தங்க இருப்பு, போலந்தின் நாணயமான ‘ஸ்லோட்டி’ (Zloty) மீதான நம்பிக்கையை உலக முதலீட்டாளர்களிடையே அதிகரிக்கும்.
தற்போதைய உலக அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், தனது நிதித்துறையைத் தற்சார்பு கொண்டதாக மாற்ற போலந்து திட்டமிடுகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக தங்கம் வாங்கிய மத்திய வங்கியாக போலந்து திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அண்டை நாடுகளான ஜெர்மனி மற்றும் இத்தாலிக்கு இணையாக ஐரோப்பாவின் முன்னணி தங்க இருப்பு நாடாக போலந்து உருவெடுத்துள்ளது.
உங்களுக்குத் தெரியுமா? இந்த 150 தொன் தங்கம் என்பது சுமார் 4.8 மில்லியன் அவுன்ஸ் ஆகும். இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 23 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது!
உங்கள் கருத்துப்படி, ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்கம் எவ்வளவு முக்கியம்? கீழே கமெண்ட் செய்யுங்கள்!


