பிரதமர் ஹரிணி – IMF தலைவர் இடையே முக்கிய சந்திப்பு..!

பிரதமர் ஹரிணி – IMF தலைவர் இடையே முக்கிய சந்திப்பு..!

இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்குத் தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்ததாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin